பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாச்சியப்பன் மயங்காதே ! மறவாதே ! குன்ருெத்த தோளுடையாய் குறித்துப் பார்க்கும் கொடியவுளம் உடையாரைக் கூர்வேல் கொண்டு கொன்ருெத்த புகழுடையாய் ! கோவே செம்மை கோடாத வாழ்வுடையாய் கொடிய ராய இன்ருெத்த மாற்றலர்கள் ஏமாற்றித் தம் இனவாழ்வின் நினைப்புடனே இனிக்கப் பேசிச் சென்ருெத்த உயர்வடைவார், சிதைப்பார் உன்னைச் செந்தமிழா மயங்காதே ! சினத்தைக் கொள்வாய் ! குளிர்மிக்க இமயத்தில் கொடி நாட்டிப் பின் கொடுங்கோலர் தமையெல்லாம் அடக்கியாண்டு வெளிநாடும் வென்ருண்ட வீறுடையாய் ! விழிப் பொன்ருல் உலகத்தை நடுங்க வைத்தாய் ஒளிவாக நூல்களிலே சூழ்ச்சி செய்து, - உன்நாட்டார் தமைப் பழித்தார், உளங் கொதிக்க தெளிவாக உணர்ந்திடுவாய் செய்த தீமை செந்தமிழா மறவாதே சீறிப் பாய்வாய் ! அறிவின்மை யுலகத்தை யாண்ட காலை அறிவுடனே அன்புடனே ஆட்சி செய்து நெறிதனிலே உலகத்தை நிறுத்திக் கண்டாய் நெடுவளவா! செந்தமிழா! நேற்று வந்த வெறி பிடித்த நெஞ்சினர்தி வினையி னலே வெறுநாடாய்த் தமிழ்நாட்டைச் செய்யலானர் செறிகழற்ருன் மிகவொலிப்பச் சீறிப் பாய்ந்து சிங்கமென முழக்கிடுவாய் ஆர்ப்பரித்தே !