பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 19 முன்னெருநாள் போர்க்களத்தில் முந்திச் சென்று முகிலிடித்தாற் போலார்த்து வாளின் வீச்சே மின்னிடப்போர் செய்தவனே, வெற்றித் தோளா ! மீன்கொடியாய், இந்நாளில் எதிர்த்து வந்தார் பின்புறத்தில் அம்பிட்டுப் பேரெதிர்ப்பைப் பின் வாங்கச் செய்திடுவார், ஆதல், அன்னர் முன்புறத்தில் திரும்பிடுவாய் முழக்கி யம்பு முனைதன்னில் வெற்றிதனே முடித்து வாராய் ! அன்ருெரு நாள் புகழ்சுமந்த அரசர் கோவே அறியாமைக் கோட்டையென இலகுகின்ற நின்னுடைய கோயில்நிலை நினைத்துப் பாராய் நீசர்தமை ஒறுத்தொழிக்க எழுந்து வாராய் அன்னவர்கள் செந்தமிழன் உள்ளந் தன்னை அறிந்திருந்தும் மறந்தனர்காண், ஆத லாலே சின்னவர்கள் மடமையினை வளர்க்கலானர், செந்தமிழா ! இப்பொழுதே சீறிப் பாய்வாய் !