பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாச்சியப்பன் பேதை மாது செந்தமிழ் மாதென்னும் பேதையளே - நான் செப்பும் உரைகள் சற்றுக் கேளடியே ! ஒன்றே குலமென்று நீயுரைத்தாய் - எனில் ஒழுக்க மற்றவர் உள்ளத்திலே நின்றே நிலைத்தது சாதியெனும் - பெரும் நீசப் பிரிவினைப் பிசாசதுவே ! அண்டியே வந்தவர் யாவரையும் - நீ ஆதரித்தாய் அவர் சூழ்ச்சியில்ை தண்டமிழே உன்றன் மக்களெல்லாம் - இன்று தனித்தனியாய்ப் பிரிந்தேங்குகின்ருர். ஒருவனே தேவனென்று நீயிசைத்தாய் - அவர் ஒன்றல்ல முப்பத்து முக்கோடி இருக்கின்ற தேவர்கள் என்றுரைத்தார் - உன் இசையை மறைக்கத் துணிந்துவிட்டார். சூழ்ச்சியால் வெல்லும் பகைவர்களே - அடி தொலைக்க வேண்டும் என்றேயெழுவாய் விழ்ச்சி வீழ்ச்சி பகைவர்கட்கே - என்று வீரர்கள் கிளம்புவர் பாரடியே !