பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 21 அன்னை துயர் கன்னல் தமிழ்மொழி எங்களின் மொழியே கருத்தொடு வளர்க்கக் காண்பமோர் வழியே என்ன மொழிந்தனை செந்தமிழ் மகனே ஏனிந்த வேடம் எனக் கதைப் புகலே மின்னல் எனப்படை கொண்டிங்கு வந்தே மேவும் பகைகளை வீழ்த்துவ மென்றே இன்னுந் தமிழர்கள் ஏனெழ வில்லை ஏனெழ வில்லையென் றேசினள் அன்னே! சொந்த அறிவெனக் கொஞ்சமும் இல்லை சோர்ந்தனை அன்பென்றன் நெஞ்சினில் இல்லை நிந்தனை செய்தவர் நீடுவாழ் கின்ருர் நீயவர் தாளிணை பற்றிநிற் கின்ருய் செந்தமிழ் அன்னை நின் சீர்கண்டு மகிழச் சிங்கமென் முர்த்தெழு மற்றவர் இகழின் வெந்திடு வீரெனக் கண்ணில்தீப் பொறியே விளைத்திடு பகையினைக் கைகொட்டிச் சிரியே! அன்னை நின் துயர்கண் டயர்த்தழு கின்ருள் அவளழல் கண்டும் பேசாதிருக் கின்ருய் உன்னைத் தன் மகனென உரைத்திடக் கூசி ஒடினள் குமரிக் கடலினுள் மூழ்கித் தென்னவன் பாண்டியன் அழைத்திட வந்தாள் தெய்வமென் றேத்தினர் சேரரும் சோழரும் பின்வந்த நீயோ பேசிட வில்லை பேசினேன் அன்ன பெருந்துயர் சொல்லி !