பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாச்சியப்பன் அன்னையின் அணிசில அழிந்தன கேளாய் அழித்தஅப் பெருங்கடல் அடக்கினர் தோழா முன்னையந் தமிழர்கள் மொய்ம்புறக் காத்தார் முன்னவர் பின்வந்த நீயோ வேர்த்தாய். இன்றுநம் இலக்கியம் அழிப்பவ ரெல்லாம் ஏதுமில் மனிதப் பிறவிகள் கண்டாய் அன்னவர் தமைவெல ஆசைநீ கொண்டால் அந்நொடி கிட்டுதல் வெற்றியே கண்டாய் ! அன்னையின் துயரினை யாதெனச் சொல்வேன் அன்பநீ காதிணை சற்றிங்கு திருப்பாய் ! உன்னிலை எண்ணி ஓய்விலாத் துயரே உற்றன ளன்னை உன்நிலை நினைவாய். என்னை நின் வாணிகம் என்னை நின் சமயம் ஏனெங்கும் அடிமை” என இருக் கின்ருய்? முன்னவர் வழியினை உன்னிநீ பாராய் முன்வர வழியினைத் தேடியே வாராய் !