பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 23 கனவு பலிக்குமா? கண்ட கனவு பலிக்குமா என்றென் கை பார்த்துச் சொல்லடி-குறத்தி என்றன் கைபார்த்துச் சொல்லடி தை மாதம் வந்த வுடனே இங்கே தமிழரின் இல்லம் நிறைவது போலே கண்ட கனவு... செந்தமிழ் நாட்டுத் தலைவரை இந்தச் செகத்துத் தலைவர் அத்தனை பேரும் வந்து வணங்குவ தாகவும் பரிசு வண்டி வண்டியாய்க் குவிப்பதாகவும் கண்ட கனவு... அண்டை யயலில் உள்ள நாட்டினர் அன்பி லாததோர் வன்பகை யாலே சண்டை நேரிடின் சமரசம் பேசத் தமிழர் தலைவரை நாடி வருவதாய்க் கண்ட கனவு .. எத்திசை நாட்டிலும் செந்தமிழ் நாட்டின் ஏற்றம் புகழ்ந்தவர் பாட்டிசைத் திடவும் சித்த மகிழ்ந்திங்கே நாட்டிய மாடவும் சிரித்த முகத்துடன் மாதர் உலாவரக் கண்ட கனவு... வில்லும் புலியும் மீனும் பொறித்த வீரத் தமிழ்க் கொடி கட்டிப் பறக்கச் செல்லும் கப்பலில் உலக வளத்தைச் சென்று காணநான் நின்றது போலே கண்ட கனவு பலிக்குமா?