பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாச்சியப்பன் மறைமலை யடிகளை மறந்திடாதே இனித்திருக்கும் செந்தமிழில் வடமொழிக்கேன் இடங்கொடுத்துத் தமிழ்ச் சுவையைக் கெடுக்கவேண்டும்? தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழினேடு தகுதியிலாப் பிறமொழியைக் கலக்க வேண்டாம் எனத்திருவாய் மலர்ந்தவர்யார்! இசைத்த வண்ணம் இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்துத் தனித் தமிழின் நலங்காத்தார் மறைமலையார் தமிழ் மகனே அவர் பெருமை மறந்திடாதே! பல மொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார் உலகமொழி அனைத்தும்வந் தெதிர்நின் ருலும் ஒருதமிழ்ச் சொற் கீடாகா தெனவறிந்தார் விலகுகவே விலகுகவே என்று கூறி வேற்றுமொழிச் சொல்களேந்து தமிழில் நூற்கள் பலதந்து தமிழ் காத்தார் மறைமலையார் பழந்தமிழா அவர்நினைவு மறந்திடாதே ! சந்தேகம் தமிழில்லை ஐய முண்டோ? சந்தோஷம் தமிழில்லை மகிழ்ச்சி கண்டீர் குந்துமொரு வண்டியைப் போய் சைக்கிள் என்பீர் குறையுண்டோ மிதி வண்டி என்னும் சொல்லில் எந்திரத்தை விசைப் பொறிதான் என்று சொன்னல் இளக்கமில்லை பெருமையென எடுத்துக் காட்டிச் செந்தமிழைத் துய்தாக்கி பூரீயை நீக்கித் திருத்தந்தார் மறைமலையார் மறந்திடாதே!