பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாச்சியப்பன் தமிழ் முழக்கம் செய்வீர் எங்கணும்பால் பொங்குமொரு மகிழ்ச்சி கண்டேன் இன்பத்தில் திளைத்திருக்கும் மாந்தர் கண்டேன். பொங்கிவரும் பூரிப்பில் திளைத் திருக்கும் புத்துலகச் சிற்பிகளே ! மாணவர்காள் ! உங்களுக்கோர் ஆணையிட்டேன், தமிழை யுங்கள் உயிர்போலப் போற்றுவதாய் உறுதி செய்வீர்! சிங்கத்தைப் போல்பாய்வீர் தமிழ் கெடுக்கும் சிறுநரிகள் தமைக்கண்டால் எழுச்சி கொள்வீர் ! தமிழ்நாட்டில் தமிழரெனப் பிறந்தவர்க்குத் தாய்த்தமிழைப் போற்றுவதே கடமை யென்பேன்! தமிழராய்ப் பிறந்திருந்தும் தமிழ்படிக்கத் தக்கநல்ல வசதியின்றித் தவித்திருக்கும் நமையொத்த தமிழர்க்கே உதவி செய்தல் நம்கடமை ! மாணவர்காள் ஒய்வு நாளில் அமைத்திடுமோர் சங்கத்தின் மூலமாக அருந்தமிழைக் கல்லாதார் கற்கச் செய்வீர் ! பிழையின்றிப் படித்தற்கும் எழுதுதற்கும் பெரும்பாலோர் முயல்வதில்லை. இலக்கணத்தை நுழைப்பதற்கு மூளையிலே இடமுமில்லை நொண்டியென வாசகத்தை எழுதுகின்ருர், அழைத்துவந்து தமிழறிவைப் புகுத்த வேண்டும். அழகுதமிழ் நடைசிறக்க உழைத்தல் வேண்டும். பிழையில்லாச் செந்தமிழைப் பெருக்க வேண்டும். பேருலகில் தமிழ்முழக்கம் எழுப்ப வேண்டும்.