பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாச்சியப்பன் தனித்தமிழில் பொறியுறுப்பு தென்னட்டான் செந்தமிழன் என்ஊர்க் காரன் தெளிவான நாட்டுணர்ச்சி மிக்க வீரன் எந்நாட்டும் புகழ்நாட்டும் விஞ்ஞானத்தால் இயங்குமொரு பொறிசெய்தான் வியக்கு மாறே ! மின்னற்றல் கொண்டியங்கும் அப்பொ றிக்கு மேலான செந்தமிழில் பெயர்வைத் திட்டான் தன்னற்றல் மிக்கபொறி யுறுப்புத் தோறும் தனித்தமிழில் பெயர்பெற்றுச் சிறந்த தன்றே ! பார்வியக்கும் பொறி செய்யும் திறமை மிக்க பல்கலையும் கற்றவர்க்குத் தமிழில் அந்தப் பேர் உரைக்கும் திறனில்லை என்று சொன்னல் பித்துடையார் கூற்றன்ருே நம்பப் போமோ? கூர்பிடித்த வாளுக்கு வேலை வைத்தால் குருதிகக்கச் செய்திடத்தான் நேர மாமோ ? நேர்மையுடன் நாட்டுணர்வும் நிலைத்துக் கூடின் நினைப்பதெலாம் நடந்துவிடும் ! தயக்க மில்லை ! விடியாது விடியாதென் ருேதிக் கொண்டே iணுகச் சோம்பேறி படுத்தி ருப்பான் ! முடியாது முடியாதென் ருேதிக் கொண்டே முரணுன பேர்வழிகள் நடித்தி ருப்பார் ! கடியார முள்ளோடும் கணக்கைப் பார்த்துக் கடிதாக உழைக்கின்ற தமிழர்க்கென்றும் படியாத தொன்றில்லை : உழைப்பிற் குண்மைப் பயன் சேரும் : புகழ் கூடும் பாரெல் லாமே !