பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துரை டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் எம்.ஏ., எம்.எல்.சி., தலைமை ஆசிரியர்: ஆங்கிலத் தமிழ் அகராதித் துறை சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை திரு. நாரா நாச்சியப்பன் அவர்கள் இயற்றியுள்ள காதற் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூலினைப் படித்துக் களிப்புற்றேன். மவரைக் காட்டிலும் மெல்லியது காதல் என்பார்கள். அவ்வளவு மெல்லிய பொருளைப் பற்றி இவ்வளவு அழகியதாகப் பாடுதல் இயலுமோ என்று திகைத்து வியப்புறக் கூடிய வகையிற் கவிஞர் நாச்சியப்பன் இக் கவிதைகளை இயற்றியுள்ளார். இவர் செய்யுட்களின் கருத்தாழமும், அகலமும், செவிக்கினிமையும், மெய்ப்பாட்டுணர்ச்சியும் படிப் போரை வயம் இழக்கச் செய்கின்றன. சில கீறல்களைக் கீறி அக்கோட்டினுள்ளே ஒருயிரினப் பிழம்பு கொள்ளச் செய்யும் சிறந்த ஒவியரைப்போல இக் கவிஞர் சில சொற்களால் மங்கையரை உருக்கொண்டு எதிரே வந்து பேசுமாறு செய்து விடுகிரு.ர். காதலர்களுடைய வேணவாக்சளும், ஏமாற்றங்களும், பிரிவுத் துயர்களும், உவகைச் செயல்களும் உயிரோவிய மாகத் திகழ்கின்றன.