பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்க்ள் - 29 குட்டையடா குட்டையிந்த வெட்டரிவாள்; தென்னங் குலைசாய்க்கக் கூடுவதோ என்றுரைப்பார் போலே நெட்டையராம் வெள்ளேயரின் விஞ்ஞானச் சொற்கள் நேர்தமிழிற் கூற வியலா தென்றுரைப்பார்; மேலே வட்டநிலாச் சுற்றிவரும் வல்லமையைக் கண்டு வாய்பிளக்கும் சோம்பேறிக் கூட்டத்தார் என்றும் பட்டைச்சோ றுண்பவர்க்குப் பகுத்தறிவா கூடும்! பாடுபட்டால் வெற்றிபெறத் தாமதமா ஆகும்? மொழித்துறையின் அறிவில்லார் புதுச் சொல்லின் ஆக்கம் முடியாது தமிழிலெனக் கூட்டங்கள் போட்டுப் பழித்திருப்பார்: கை கொட்டிப் பார்த்திருப்பார் மற்ருேர் படித்தவர்கள் இவரெல்லாம்! செந்தமிழ் நாட்டாரே ! விழித்துவிட்ட தமிழகத்துள் தாமிருந்து கொண்டே வேடிக்கைக் கருத்துக்கள் உதிர்த்திருக்கும் இந்த மழித்ததலைக் காரரெல்லாம் இந்நாட்டைச் சேர்ந்த மக்களென்ற காரணத்தால் பிழைத்துள்ளார் அன்றே! இலக்கணத்தும் இலக்கியத்தும் பெரும்புலமை எய்தி எழிற்றமிழைக் கொழிக்கின்ற வல்லமையும் பெற்றுக் கலக்கமற்ற திறனறிவு வாய்ந்திருக்கும் நிலையில் கணக்குடனே விஞ்ஞானத் தொழிற்கல்வி கற்ருேன் வலக்கையைப் பெற்ற பயன் பெற்றவனம்! இந்த வையத்தின் மேன்மைக்கும் அச்சாணி ஆவான்! மலர்க்குவியல் தருமழகு மல்குவிக்கும் சொற்கள் வழங்கிடுவான் விஞ்ஞானத் துறையெல்லாம் அவனே!