பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தாச்சியப்பன் சிங்கத் தமிழன் பெரியார் உலவச் சிறந்த தமிழ் நாடே! தீய மூடக் கொள்கை சாயத் திகழும் தமிழ் நாடே! ஏற்றத் தாழ்வால் இருண்டு கிடந்த எங்கள் தமிழ் நாடே எந்தை பெரியார் அறிவு விளக்கை ஏற்றும் தமிழ் நாடே! ஆற்றல் மறவர் அறிவியக்கம் ஆர்ந்த தமிழ் நாடே! அகன்று போன மடமை கண்டே ஆர்க்கும் தமிழ் நாடே! சூதும் வாதும் தூளாய்ப் பறக்கத் துலங்கும் தமிழ் நாடே! தோழமை யாலே ஏழைமை மாய்த்துச் சுடரும் தமிழ் நாடே! வேத புராணம் வகுத்த நீதி விலக்கும் தமிழ் நாடே! வேற்றுமை யாளர் தோற்றுத் தொலைய வென்ற தமிழ் நாடே. முடத் தனத்தை முறியடிக்கும் முத்துத் தமிழ் நாடே! முயற்சி யாளர்க் குயர்வு கொடுக்க முந்துந் தமிழ் நாடே! பாடப் பாட உவகை நல்கும் பண்டைத் தமிழ் நாடே! பகுத்தறிவு வழி நடக்கும் பண்புத் தமிழ் நாடே!