பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாச்சியப்பள் கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும் குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள் கள்ளமிலா நாட்டினரின் உள்ளந் தன்னைக் கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள் வெள்ளம்போல் பெருக்கிநம்பால் விலைப்படுத்தி விந்தையுறத் தமிழ்வளர்ப்பதாகக் கூறும் குள்ளர்களும் இந்நாட்டில் பெருகிப் போனர் குணங்கெட்டார் இவைபடித்தார் நூறு நூருய் ! இருசொற்கள் புணர்ந்திடுங்கால் தோன்று மொற்றை எடுத்துவிட்டுத் தமிழெழுதும் கூட்ட மொன்று, 'விரியுலக வழக்கினிலே விளங்கு கின்ற வேற்றுமொழி பலகண்டோம் புணர்ச்சி யென்னும் ஒருவிதியைக் கண்டதில்லை ! தமிழில் மட்டும் உண்டெனிலோ அதுபடிக்க நேர மில்லை கருதுவதை யெழுதுங்கால் ஒற்று மிக்குக் காண்பதல்ை என்னபயன்' என்று கேட்கும் ! செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே சிறுகவிதை புதுக்கவிதை வசனப் பாட்டு விந்தையுற எழுதுகிருேம் என்று சொல்லி விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்ரும் ! அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம் அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச் செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற சிறுவணிகர் கூட்டந்தான் மற்முென் ருகும் ! இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும் எதிரியென ஒரியக்கம் இருக்கக் கண்டோம்.