பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாச்சியப்பன் சிவனும் பெருமாளும் போற்றும் செந்தமிழ் வாயிற் பிறந்து வழங்கு மொருமொழியைத் தாய்மொழியென் ருரேனே சாற்றிடுவீர் ? -தாய்தான் எடுத்தணைத்துக் கொஞ்சி யிருந்தக்காற் சொல்லிக் கொடுத்ததனை நெஞ்சிற் குறித்து. பிறமொழியைக் கற்றறிந்து பேசுமொழி யாக்கி யுறவுமொழி நீத்தாலென் ஒது ? -நறுந்தேனே நேரான பாதைவழி நின்றிருந்தும் முட்காட்டைச் சீராக்க வெண்ணுவதே வீண் ! விஞ்ஞானம் கற்பதற்கு வேற்றுமொழி வேண்டுமெனில் அஞ்ஞான மேதமிழா லாமன்ருே ? -மெய்யான எஞ்ஞான மும்தமிழில் ஏற்றிடலாம் மக்களுளத் தஞ்ஞானந் தீர்ந்துவிட்டக் கால் பன்மொழியார் சேர்ந்திருக்கும் பாரதநன் ட்ைடுமொழி ஒன்றுபொது வேண்டாமோ ஒதிடுவீர் ?-ஒன்று பொதுவானல் மற்றவெலாம் போக்கற் ருெழியும் அதையாய்ந் திடவேண்டா மா ? அரசு பொதுமொழியால் ஆட்சிபெற மக்கள் உரைபழகத் தாய்மொழியும் உண்டே ! -வரிசையுறு முத்தனைய பல்லாய் மொழிதான் அரசிழந்தால் எத்தனையும் முன்னேழு தே !