பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாச்சியப்பன் புதிய தமிழ் நாடு தமிழ் நாட்டில் இந்நாளில் தலைவி ரித்துத் தகிகிணத்தோம் போட்டாடும் பஞ்ச மெல்லாம் குமுறுகின்ற ஏழைமக்கள் உள்ளத் தன்னில் குதிகொள்ளும் சிந்தனையைத் தூண்டி விட்டே எமையிந்த நிலைக்குவரச் செய்த தற்கே எதுமூலம் எனவறியத் துடித்த போது தமிழ்நாட்டைக் கெடுத்ததெலாம் வேற்று மையாம் தடையென்று தெரிந்தததை யொழிக்கச் சேர்வோம்! மனிதரெனப் பிறந்துவிட்டோம் சண்டை யிட்டு மாய்வதிலே பொருளில்லை இந்நாள் மட்டும் அனைவருக்கும் பொதுவான உலகில் நீவிர் ஆட்சிசெய் அடிமையென நாங்கள் வாழ்ந்தோம். தினந்தினமும் உண்டுறங்கிக் கொழுத்த நீவிர் திடீரென்று பொதுவுடைமை கூறக் கேட்டால் மனங்கலங்கல் இயற்கையதை மாற்று தற்கும் மருந்துண்டு பகுத்தறிவென் ருென்று கண்டீர்! பகுத்தறிவில் சற்ருழ்ந்து பார்ப்பீ ராயின் பாரினிலே மனிதரிலே வேற்று மைகள் வகுத்ததெலாம் சோம்பேறி யாக வாழ்ந்து வந்தகொடும் பாதக்ரே யென்று காண்பீர்! மிகுத்தநலம் ஒருவர்உற நாட்கள் தோறும் மேனியெலாம் கருமையுற வேர்வை ரத்தம் உகுத்திடுக ஒருவரென்று மன்றில் சட்டம் உண்டாக்கி வைத்தபெரும் சண்டா ளர்யார்?