பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 43 வண்ணுனின் சேயையொரு வண்ணு னென்று வகுத்துவிட்ட மடையர்களைப் பெரியோ ரென்றே அண்ணுந்து பார்க்கின்ற அறிவற் ருேரே யான் சொல்லும் சொற்கேளிர்! ஏழை நெஞ்சம் புண்ணுக நடைமுறையில் தாழ்வு செய்து பொறுமைக்கோர் எல்லையினைக் காணச் செய்தீர்! எண்ணுமல் இருந்துவிட்டீர் பொறுமைக் கெல்லே என்ருலே புரட்சிப்போர்த் தொடக்க மென்றே! தொழிற்பெயரைச் சாதியென்று வகுத்த பின்னர் தோன்றியவள் வறுமையெனும் ஆட்டக் காரி, எழிற்பிறவி மானிடமென் றறிஞர் சொல்வார் யாமுமந்தப் பிறவிதனை யடைந்தும் வாடி நிழல்காண வகையின்றி நிற்க நேர்ந்தால் நெஞ்சந்தான் கொதியாதோ? இந்த நாட்டில் அழுதொருவன் இருக்கும்வரை விடுத லையை அடைந்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும் கூப் பாடே! ஏழ்மையெனும் நீரருந்தி உழைத்து ழைத்தே இன்பமெனும் நற்குளத்தில் நீர ருந்த வாழ்வினிலே இயலாமல் வாட்ட முற்று வாழுகின்ற பெரும்பகுதி கண்டும், செல்வர் ஆளுகின்ற மனப்போக்கும், உழைப்ப தின்றி அளாவிடுவோம் போகமெனும் நிலையும் கண்டால் கூழுமின்றி வாழுகின்ற மக்கள் உள்ளங் கொதியாம விருப்பாரோ சிந்திப் பீரே! வீரமுள்ள இளைஞர்களே இங்கு வாரீர்! விடுதலைக்கு வழிவகுப்போம் தமிழ ரெல்லாம் வீரரென வாழ்ந்தநாள் பொதுமைக் கொள்கை விளங்கியதென் றிலக்கியத்தில் சான்று கண்டோம்,