பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாச்சியப்பன் ஆரமுது தினம்படைத்தே யுண்ண வேண்டின் அனைவருக்கும் பொதுவிந்த உலக மென்ற நேரியதோர் கொள்கையினைத் தமிழர் நாட்டில் நிலைக்கவைத்தால் யாவருக்கும் விடுதலைதான்! பொதுமையெனில் பசுவருகில் புலிகள் வந்து பொதுக்குளத்தில் நீரருந்தல் என்று சில்லோர் மதியின்றிப் புகல்கின்ருர் தமிழர் நாட்டில் மாடென்றும் புலியென்றும் பேத மில்லை, புதிதாகும் தமிழகத்தில் உள்ளோர்க் கெல்லாம் பொதுவாகத் தமிழரென்று பெயரே யன்றி நிதிபடைத்தார். இவரிவரே வறிய ரென்னும் நிலைபோகும் வளமாகும் தமிழர் நாடே! வாடியொரு மகனழவும் மற்ருேர் செல்வன் வயிறடைத்து மகிழ்வதுவும் தமிழர் நாட்டில் ஒடிமறைந் தொளிந்துவிடும் மாந்தர் தம்மில் ஒருமையென்றும் நிலவும்! இன்பம் நிலவும்! துன்பம் தேடியலைந் தாலுமினிக் கிட்டா தென்று திருநாட்டில் வளம்பெருகும்! உழைப்பும், இன்பம் கூடுவதும் எல்லார்க்கும் இயல்வ தாகும் குத்துவதும் வெட்டுவதும் இல்லா தேகும்! புதியதமிழகத்தெவரும் எவர்க்கும் தொண்டு புரிவதில்லை என்றநிலை நிலவும்! நல்ல மதிப்புலவர் கொள்கையுயர் வெய்தும்! இன்ப மலர்ப்பூங்கா வெனத்திகழும் நாடு மக்கள் பொதுமையெனும் தேனருந்தி வாழ்வர்! காதல் புரியுமெழில் வனிதையர்கள் இளைஞ ரெல்லாம் இதயந்திறந் தளவளாவும் நிலைவந் தின்பம் இருக்கும்.எழில் இருக்கும்என முழக்கு வோமே!