பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்டல்கள் 45 நம் நாடு கொக்கரக்கோ கொக்கரக்கோ எழுந்திருங்கள் என்று கரையிலே சேவல்நின்று கூவுமொலி கேட்டே அக்கரைக்குத் தலைவைத்துப் படுத்திருந்த தங்க ஆதவனர் பசும்போர்வை விலக்கியெழக் கண்டே 'அக்கக்கா என்றுகிளி அழைத்திருக்கக் காகம் ஆகாகா! என்றுவர வேற்பிசைக்க நாலா பக்கத்தும் உயிரினங்கள் கண்மலரக் கண்டு பரவசங்கொள் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே! பச்சைவயல் அத்தனையும் பொன்பரப்பிக் கொண்டு பகலவளுர் கண்விழித்துப் பார்க்கின்ற போதில் இச்சையுடன் முகமலர்ந்து வரவேற்புக் கூறி இதயத்தைத் திறக்கின்ற பூக்களினம் கோடி! கச்சிதமாய்க் கோலமிட்டு வாசலிலே தங்கள் கைம்மலரால் எழில் பரப்பும் மாதர்களின் தோற்றம் அச்சிட்ட நெஞ்சினராய்த் தொழில்நாடிச் செல்லும் அன்பினர்வாழ் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே ! காடுகளும் சோலைகளும் காவிரியின் ஆக்கம் கமழ்கின்ற தமிழ்மணமோ வைகைக்கரைத் தேக்கம் வீடுகளும் ஆலயமும் இசை கமழும் பாக்கம் வீணையுடன் நாதசுரம் விளக்குமிசை காற்றில் ஓடிவரும் உளம்நிறையும் உவகையிலே கூத்தும் உண்டாகி எங்கணுமே ஆனந்தம் சேர்க்கும் ஆடுகளும் மாடுகளும் கழுத்துமணி அசைய ஆடிவரும் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே !