பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாச்சியப்பன் திருக்கோயில் யானையுடன் பாகன்வரும் போது சிறுவரெலாம் ஓடிவந்து பழங்கொடுத்து மகிழ்வர் கருக்கொண்ட முகிலினங்கள் மழைபொழியும் போது கப்பல் விட்டுத் தெருநீரில் விளையாடி மகிழ்வர் தெருக்கோடிப் பள்ளியிலே விளையாட்டு நேரம் சீருடையில் பயிற்சிசெயும் காட்சி ஒரு கோலம் சுருக்காகச் செயல்புரியும் வருங்கால மக்கள் சூழ்ந்தாடும் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே! நாற்றங்கால் நடுகின்ற போதிலொரு பாட்டு நன்கு பயிர் வளர்ந்த பின்னே அறுவடைக்கோர் பாட்டு ஏற்றநீர் இறைக்கின்ற போதிலொரு பாட்டு ஏரியிலே தோணிவிடும் போதிலொரு பாட்டு மாற்றவர்மேல் படையெடுக்கும் போதிலொரு பாட்டு வாகைபெற்றுத் திரும்பிவரும் போதிலொரு பாட்டு காற்றடிக்கும் போதெல்லாம் காதில்விழும் பாட்டு களிபெருக்கும் செந்தமிழ்த்தாய் நாடெங்கள் நாடே!