பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 47 சிந்தை பறிக்கும் விந்தை நூல்கள் தேவாரப் பண்ணேத் திருவா சகத்தேனே நாவாரப் பாடி நயங்கண்டு செந்தமிழின் இன்னிசையிற் சொக்கி நான் இன்ப வயமாகித் தன்னை மறந்தநிலை தன்னில் இருந்ததுண்டாம்? ஆரியத்தைக் கம்பன் அழகாக்கிச் செந்தமிழில் ஊற வைத்துத் தந்த உயர்கா வியத்தைப் படித் தென்றன் நெஞ்சைப் பறிகொடுத்துக் கள்ளுக் குடித்தவனைப் போல் மயக்கம் கொண்டு திரிந்ததுண்டாம்! குற்ருல நாதர் குறவஞ்சிச் செந்தமிழில் வற்ருத கற்பனையாய்ப் பாய்ந்துவரும் தேனருவி சிந்தும் அழகினிலே சிந்தை பறிகொடுத்து விந்தை விந்தை யென்றே வியப்புற் றிருந்ததுண்டாம்! சொல்லழகில் கற்பனையில் சொக்குந் தமிழ்நடையில் வல்லனவாய்க் காவியங்கள் பல் வகையாய்க் கண்டெனது நெஞ்சைப் பறிகொடுத்து நின்றேன். எனினு மதில் கொஞ்சங் குறையுண்டு கூறிடுவேன் கேளிரோ சாதியால் கெட்ட சமயத்தால் தீமைமிகு நீதியால் நாடு நிலைகெட் டிருக்குங் கால் சாதி பெரிது சமயம் சிறந்ததென ஒதுகின்ற காதைகளால் உண்மை நலமுண்டோ?