பக்கம்:நாடகக் கலை 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நாடகக் கலை ரசிகளின் ஆதரவு மக்களின் ரசிப்பு ஒன்றுதான் நடிகனுக்கு உற்சாகத் தைத் தரக்கூடியது. தீபாவளி, பொங்கல், வருடப் பிறப்பு முதலிய மகிழ்ச்சி தரும் காள்களிலேகூட கடிகன் தன் மனைவி மக்களோடு இன்புறுவதில்லை. அவன் இன்பம் அனுபவிக்கத் தெரியாதவன் அல்லன்" அவனுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அந்த நல்ல காள்களிலே கடிகன் மக்களை மகிழ்விக்க வந்துவிடு கிருன். அவன் கடிப்பில்தானே இன்பம் காணுகிருன். உடல் கலம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எப்பொழுதோ சில வேளைகளில் ஏற்படக்கூடிய கோபம், சோகம், வீரம் முதலிய உணர்ச்சிகளையெல்லாம் சில மணிநேரங் களில் செய்து காட்டுகிருன் நடிகன். அந்த உணர்ச்சி கள் கடிகனுக்கு எவ்வளவோ கலிவை உண்டாக்கும். அந்த கலிவு ஏற்படாமலிருக்க வேண்டுமானுல் கடிகன் நல்ல உடல் கலம் பெற்றவனுக இருக்க வேண்டும். ஒவ்வொரு கடிகனும் ஒரு குறைந்த அளவுக்காவது உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். -- உடற்பயிற்சியின் மூலம் மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் நல்ல உடல் நலம் பெற்று, கடிப்புக்கலை பயின்று நடிக கட்சத்திரங்களாகி, நமது காட்டிற்கும் மொழிக்கும் பல்லாண்டு காலம் பணிபுரிந்து, எல்லா கலன்களும் பெற்று, இனிது வாழ வேண்டுமென இறைவனே வேண்டுகிறேன். வாழ்க, வளர்க, நடிப்புக்கலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/111&oldid=1322654" இலிருந்து மீள்விக்கப்பட்டது