பக்கம்:நாடகக் கலை 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாடகக் கலை பொழுது போக்காக மட்டுமே கலை இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் மக்களிடம்-மனித சமுதாயத்தினிடம் கருணை இல்லாதவர்கள், அன்பில் லாதவர்கள். மனிதன் உயர வேண்டும், வாழ்க்கை உயர வேண்டும்; சமுதாயம் உயர வேண்டும் என் றெல்லாம் அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. ஆளுல் கலை உயர வேண்டுமென்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வாழ்வுக்காகவே கலை மனித சமுதாயத்தினிடம் பற்றுக் கொண்ட ரசிகர்கள், கலைஞர்கள், மனித வாழ்வு வளம்பெற வேண்டுமென எண்ணும் நல்லவர்கள கலை-சிறப்பாக காடகக்கலை-வாழ்வுக்கு வளர்சசி தரும் முறையிலே தான் வளர வேண்டுமென விரும்புவார்கள். கமது காமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கலையைப்பற்றிக் குறிப்பிடுகிருர்கள் பாருங்கள் : கெையன்ருல் உணர்ச்சிகளைக் கவர வேண்டும் களிப்பூட்டி அறிவினைப் போய்க் கவ்வ வேண்டும்.’ ஆம்; கலை ரசிகனுக்குக் களிப்பூட்டவேண்டும். அவன் உணர்ச்சிகளைக் கவரும் முறையில் இருக்கவேண்டும். அதற்குமேல் அவனது அறிவைப் போய்த் தட்டி யெழுப்பவும் வேண்டும் என்று சொல்லுகிருர் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/114&oldid=1322658" இலிருந்து மீள்விக்கப்பட்டது