பக்கம்:நாடகக் கலை 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம் 1梅〕 மகாகவி பாரதி சொல்வதைப் பாருங்கள் : வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்!’ உண்மைதான்; கலைப்பெருக்கினுல் மனித குலத்தின் அறிவுக்கண் திறக்கிறது. அறியாமைப் படுகுழியில் விழுந்து கிடக்கும் மக்களுக்கு அது வாழ்வளிக்கிறது. சமுதாயத்தின் மனவிருளை நீக்கி அறிவொளி பரப்பி கல்வழி காட்டுகிறது. நல்ல நாடகங்களின் மூலம் மக்கள் கல்லறிவைப். பெறுகிருர்கள். வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்து கொள்கிறர்கள். அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை கடத்திச் செல்வதற்குரிய துணிவைப் பெறுகிருர்கள். பல்வேறு வகைப்பட்ட நாடகக் கதை நிகழ்ச்சி களின் மூலம் வாழ்க்கை உண்மைகள் மக்களுக்கு எளிதாக எடுத்துக்காட்டப்படுகின்றன. மனிதன் மனிதனுக வாழ முயல்கிருன். தவறு நேரும் சமயங் களில் காடகக் காட்சிகள் அவன் கினைவுக்கு வரு கின்றன. அவை அவனுக்குச் சரியான வழியைக் காட்டித் திருத்துகின்றன. கலையும் கல்வியும் கல்வியறிவோடு இந்தக் கஜலயறிவும் சேரும் போது மனிதன் கிறைவு பெறுகிருன். தான் கற்ற: கல்வியால் பெற்ற அறிவின் வழியில் நிற்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/115&oldid=1322659" இலிருந்து மீள்விக்கப்பட்டது