பக்கம்:நாடகக் கலை 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈18 காடகக் கஜல் வருகிறது. என்னையா பகலெல்லாம் அலுவலகங்களில் உழைத்துவிட்டு அலுப்போடு கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வருகிருன் மனிதன். வந்த இடத்திலும் வாழ்க் கைத் தொல்லைகளைப் பற்றிப் பிரசாரமா?’ என்று கேட் கிருர்கள். உண்மைதான். நாடகம் அவர்கள் எண்ணு கிறபடி பொழுதுபோக்குக் கலையாக இருக்கலாம். ஆனல் நல்ல கலைஞர்கள், தாய்மைப் பண்புள்ள கலைஞர்கள், நாடகத்தை அதற்காக மட்டும் பயன் படுத்தமாட்டார்கள். கள் வெறியும்-கலை வெறியும் கள் வெறியால்கூட சில மணி கேரம் இன்பம் கிடைக்கிறது. கலையும் ஒருவகை வெறிக்குச் சமமானது தான். சில மணி நேர இன்பப் பொழுது போக்குக்காக மட்டும் இதைப் பயன்படுத்துவோமானுல் கள் வெறிக்கும் கலை வெறிக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடுமல்லவா? எனவே, பொழுது போக்கு என்ற போர்வையில் சில கல்ல உண்மைகளைச் சொல்லுவதே நாடகத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். பொழுது போக்குக் கலை என்பது கரக விளையாட்டு, காவடி யாட்டம், சிலம்பக்கூத்து, கழைக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம் இன்னும் இவைபோன்ற பல்வேறு பட்ட கலைகளாகும். இந்தக் கலைகளெல்லாம் தனி மனிதனின் பயிற்சித் திறமையை வெளிப்படுத்தும் கலைகள். இவற்றிலும்கூட ஏதேனும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு பாடத்தொடங்கும்போது இவையும் பிரசாரக் கலைகளாகி விடுகின்றன. பொதுவாக எல்லாக் கலைகளுமே ஒன்று அறிவு வளர்ச்சி, அல்லது உடல்வளர்ச்சி இவற்றின் அடிப்படையிலே எழுந்தவை தாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/118&oldid=1322663" இலிருந்து மீள்விக்கப்பட்டது