பக்கம்:நாடகக் கலை 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம் 127 கட்டங்களிலே இருக்கலாம். அது நாடகத்திற்குச் சிறப்பைத் தரும். ஆல்ை, நாடக வசனம் முழுவதும் முதலிலிருந்து இறுதிவரை எந்தப் பாத்திரம் பேசிலுைம் அடுக்கு மொழியாகவே இருக்கவேண்டுமா? அதனுல் நாடக உணர்ச்சி குறைந்து விடாதா? பாத்திரத்தின் பண்பு கெட்டுவிடாதா? இவற்றையெல்லாம் காட காசிரியன் கன்கு சிந்திக்க வேண்டும். அது மட்டுமன்று, காடகத்தைப் பார்க்கிறவர்கள் பாத்திரங்களையும், அ. வர் க ளு ைட ய உணர்ச்சிப் போராட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் மறந்துவிட்டு வெறும் வார்த்தைகளுடைய ஜாலங்களிலேயே மனத் தைச் செலுத்தும்படியாக ஆகிவிடுகிறது. கலையம்சமுள்ள பிரசார நாடகமென்ருல், பாத்திரப் படைப்பு, குணப் போராட்டம்; இப்போராட்டத்தில் உச்சம்; அந்த உச்சத்தின் விளைவு; காலம், இடம், செயல் இவற்றின் ஒருமைப்பாடு: இவையெல்லாம் சிறப் பாக அமைந்த ஒரு கட்டுக்கோப்பு இருக்கவேண்டும். கலைவழி என்பது அறவழி கலைக்குரிய மகத்தான ஒரு சிறப்பையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். கலைவழி என்பது அன்பு வழி; அறவழி. எந்தக் கருத்தையும் இனிமையாகப் பண்போடு அன் போடு மக்களுக்கு எடுத்துச்சொல்லி மனமாற்றம் ஏற்படும்படியாகச் செய்வதுதான் கலை வழி. அது தான் பயன் தரும் வழி; அந்த வழியில் செல்வதே கலைஞனின் கடமை. கத்தியை உபயோகிக்கும்போது எப்படிக் கவன மாக உபயோகிக்கிருேமோ அப்படியே கலையின் மூலம் நாவை உபயோகிக்கும்போதும் கவனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/127&oldid=1322673" இலிருந்து மீள்விக்கப்பட்டது