பக்கம்:நாடகக் கலை 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒32 காடகக் கலை பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலாங்கு மனிதன் போனறவை பிரசார நாடகங்கள். இப்போது நான் சொல்லி வந்த எல்லா வகையான நாடகங்களிலும் பிரசாரம் இருக்கிறது. புராண இதிகாசங்கள் தேவையா? புராண இதிகாச நாடகங்கள் இன்று மக்களுக்குத் தேவையா? எனச் சிலர் நினைக்கிருர்கள். அவர்கள் நாடக கல்லியல்புகளைப்பற்றி அறியாதவர்கள். மேற் போக்காகப் பார்க்கிருர்களே தவிர ஆழ்ந்து சிந்திப்ப தில்லை. புராண இதிகாசக் கதைகளிலே சொல்லப்படும் பேருண்மைகளும் அறிவுரைகளும் இன்று கடைபெறும் சில முற்போக்கு நாடகங்களிலேகூடக் காணப்பட வில்லையே! மகாகவி காளிதாசன், பவபூதி முதலி யோரின் நாடகங்கள் புராண இதிகாசக் கதைகள்தாம். மேலை நாடுகளில் இன்றும் அந்த நாடகங்களின் சிறப்பைப் போற்றுகிருர்களே! கடித்தும் வருகிருர் களே! காளிதாசனின் சகுந்தலை நாடகம் சந்திர மண்ட லத்தை எட்டிப் பிடித்த ருசியாவிலும் இன்று கடிக்கப் படுகிறதே! சென்னையில் எந்தத் தமிழ்ப் படமும் ஓடாத அளவுக்குப் பல வாரங்கள் ஓடிய பத்துக் கட்டளைகள்' என்னும் திரைப்படம் புராணக் கதைதான். ஆனல், அந்தப் படத்தின் சிறப்பு எந்த காட்டினராலும் மறுக்கப்படவில்லையே! வடமொழியிலும் தமிழ் மொழி யிலும் உள்ள நாடகங்களைத் திரைப்படங்களைப் புராணக்குப்பைகள் என்று கேலிசெய்யும் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கூட இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/132&oldid=1322678" இலிருந்து மீள்விக்கப்பட்டது