பக்கம்:நாடகக் கலை 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A134 காடகக் கலை காடகக் கலை அறிவை வளர்ப்பதாகவும் உணர்ச்சி களேத் தட்டியெழுப்பி கல்ல செயல்களைத் தூண்டுவ தாகவுமே இருக்கவேண்டும். இளங்கோ தந்த செல்வம் கெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ஓர் அருமையான காடகக் காப்பியம்: அற்புதமான பாத்திரப் படைப்புகள் அல்வழிப்பட்ட அரசை அழித்தொழிப்பேன் என்று வீறிட்டெழுந்து கின்ற ஒரு வீராங்கனையின் வரலாறு. தமிழ் மூவேந்தர்களின் சிறப்புக்கெல்லாம் சான்ருக விளங்கும் செந்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம்கமக்குக் கிடைத்திராவிட்டால் தமிழ் மக்கள் இசையிலும், கடனத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கிய செய்திகள் மறைந்தே போயிருக்கும். தாய்க்குலம் எழுச்சி பெற்று கின்ருல் கொடுங் கோஆலயும் வீழ்த்திச் செங்கோலை உயர்த்த முடியும், செம்மையைக் காக்க முடியும் எனச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக உலகுக்கு உணர்த்துகிருர் இளங்கோவடிகள். எழுச்சி பெற்ற அந்த வீரக் கண்ணகி மெய்யிற் -பொடியோடும். விரித்த கருங்குழலோடும் கையில் ஒற்றைத் தனிச் சிலம்போடும், கண்ணிரோடும் வந்து பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக் களத்திலே நிற்கிருள். 'தன் கணவன் கள்வன் அல்லன்' என்று வாதாடுகிருள். நீதி வழுவிய நெடுஞ்செழியன் உண்மை யுணர்ந்தான். - 'யானே அரசன்; யானே கள்வன், மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதற் பிழைத்தது; கெடுக என்னுயுள்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/134&oldid=1322680" இலிருந்து மீள்விக்கப்பட்டது