பக்கம்:நாடகக் கலை 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 127 கூற எப்படி உயர்த்திவிட்டார் கம்பர்! இஃதல்லவா நாடகப் பண்பின் உச்சநிலை. பாரதம் கூறும் பண்பு மகாபாரதக் கதையை எடுத்துப் பாருங்கள். பஞ்ச பாண்டவர்களின் அருமைத் தாய் குக்திதேவியும் அவ ளுடைய முதற் புதல்வனும், பாண்டவர்களில் மூத்த வனுமான கர்ணனும் சந்திக்கிருர்களே; அந்தக் கட்டத்தைப்போல் ஓர் அற்புதக் காட்சியை உலக காடக இலக்கியங்களிலே காம் பார்க்க முடியுமா? இதை கான் சொல்லவில்லை; மேனுட்டு நாடகாசிரியர்களே கூறுகிருர்கள். கர்ணனுடைய பாத்திரப் படைப்பும், குந்திதேவியின் பாத்திரப் படைப்பும் நாம் இனிப் புதிதாகப் படைக்கக் கூடியதா? குந்தியைத் தன் தாயென்று அறிந்ததும் கர்ணன் ஆனந்தக் கூத்தாடுகிறன். தாயின் காலடியில் வீழ்ந்து கண்ணிர் பெருக்குகிருன். அதே கேரத்தில் அவன் தாய், ஐவரோடு நீயும் சேர்ந்து அறுவராக இருக் கலாம்; துரியோதனனை விட்டு வந்துவிடு' என்கிருள். அங்கேதான் கர்ணனின் மனநிலை உயர்ந்து விளங்கு கிறது. "தாயே! நானும் துரியோதனனின் பத்தினி பானுமதியும் ஒருநாள் தனியே சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தோம். அபபோது துரியோதனன் வந்தான். நான் வாசல் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருகததால் அவன் வந்ததைக் கவனிககவில்லை. கணவன் வருவதைப் பார்த்ததும் பானுமதி எழுந்தாள். அந்தச் சமயம் அவள் தோலவி யடையும் கேரம். எனவே, தோல்விக்குப் பயந்து Asm.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/137&oldid=1322683" இலிருந்து மீள்விக்கப்பட்டது