பக்கம்:நாடகக் கலை 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 141 இந்தப் பழஞ் சொல்லிலே ஒரு சீரிய பொருள் புதைந்து கிடக்கிறது. 'சுக்கு கோய்களுக்குரிய மருந் துப் பொருளல்லவா? எனவே, ஒரு சுக்கும் இல்லையென் ருல் மக்கள் கோய்க்குரிய மருந்து (கருத்து) எதுவும் அந்த நாடகத்திலே இல்லை என்பது பொருள். உள்ளத்தை உயர்த்த வேண்டும் காடகம் வெறும் பொழுது போக்குக் கலையன்று; புன்மைகளைப் போக்கவும் அதைப் பயன்படுத்த வேண் டும். திரு. வி. க. அவர்களின் கருத்துரை இதைத்தான் வலியுறுத்துகின்றது. எந்த காடகத்திலும் மக்களுக்குப் பயன்படும் ஒரு கல்ல கருத்து இருக்கவேண்டும். புராணம், இதிகாசம், ச ரி த் தி ர ம், சமுதாயம்-எக்த அடிப்படையைக் கொண்டு காடகம் எழுதப்பட்டாலும், ஒன்று கான் முன்பு சொன்னதுபோல் மனிதப் பண்பை உயர்த்துவ தாக இருக்கவேண்டும்; அல்லது சமுதாயத்தை உயர்த் துவதாக இருக்க வேண்டும். "ஒரு நாடகத்தைப் பார்க்க வரும் மக்கள் நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது வந்தபோதிருந்ததை விட உள்ளத்தில் சிறிதளவாவது உயர்வான எண்ணங் களைக் கொண்டு செல்லவேண்டும். அதுதான் நல்ல காடகம்' என்று கமது ராஜாஜி அவர்கள் இராஜராஜ சோழன் காடகத்திற்கு வாழ்த்துரை வழங்கியபோது குறிப்பிட்டார். திரு. வி. க. அவர்கள் தமது கருத்துரை கபில் குறிப்பிட்ட மூன்று சிறப்புகளும் இருந்தால்தான் ராஜாஜி அவர்கள் சொல்லியதுபோல் பார்ப்பவர்கள் உள்ளத்தில் உயர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/141&oldid=1322687" இலிருந்து மீள்விக்கப்பட்டது