பக்கம்:நாடகக் கலை 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

理48 நாடகக் கலை குற்றவாளியைக் கண்டு பிடிக்க எண்ணுகிருன் ஹாம் லெட். நாடகம்தான் அதற்கு நல்ல வழி; உணர்ச்சி மிக்க கடிகர்களைக் கொண்டு தன் தந்தையின் கொலை கிகழ்ச்சியை நாடகமாக்கி கடிக்க வேண்டும்; சிற்றப்பன் கிளாடியசும் தன் அன்னையும் அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டும்; அப்போது அவர்களின் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது என்றெல்லாம் பார்க்க விரும்புகிருன். கதையைத் தானே எழுதினுன்; கடிகர்களை நடிக்கச் சொன்னன். சிற்றப்பனும் தாயும் நாடகத்தைப் பார்த்தார்கள். சிற்றப்பன் முகம் மாறியது. தந்தை யைக் கொன்றவன் அவனே என முடிவுக்கு வந்தான் ஹாம்லெட். நாடகத்தின் கற்பயனை நன்குணர்ந்திருந்த மகாகவி ஷேக்ஸ்பியர் தமது நாடகத்திலேயே உள் நாடகம் ஒன்றைப் புகுத்தி, இந்த அற்புதத்தை விளக்குகிருர். எனவே, நாடகம் பயனுடையதாக இருக்க வேண்டு :மென்பதே மகாகவி ஷேக்ஸ்பியரின் கருத்துமாகும். இந்த உண்மையை கன்குணர்ந்துதான் ருசியா, -சீன போன்ற காடுகளில் நாடகங்கள் கடத்துகிருர்கள். குழந்தைகளுக்கு என்றும், மாணவர்களுக்கென்றும், மற்றவர்களுக்கென்றும் தனித்தனியாக நாடகம் போடு கிருர்கள்; திரைப்படங்களை எடுக்கிருர்கள். இவற்றை யெல்லாம் கல்வித்துறையின் மூலம் அரசாங்கமே செய் கிறது. கம்முடைய காட்டிலும் அந்த கிலே வந்து கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/148&oldid=1322694" இலிருந்து மீள்விக்கப்பட்டது