பக்கம்:நாடகக் கலை 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*oo காடகக் கலை அசிறுவர்களுக்குரிய நாடகம் எது? சிறுவர்களின் உள்ளம் தூய்மையானது; பரிசுத்த மானது; பிஞ்சு உள்ளம். பச்சை மரத்தில் ஆணியை அடித்தால் எப்படி எளிதாக உள்ளே நுழைந்து விடு கிறதோ, அதேபோல் தூய்மையான இளம் உள்ளத் தில் தவருனவை யெல்லாம் வெகு சுலபமாகப் புகுந்து விடும். எனவே, அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இளம் பிள்ளைகளுக்குரிய நாடகம் எது? வீட்டில் தாய்தந்தை முதலியவர்களிடம் எப்படிகடந்து கொள்ள வேண்டும்; பள்ளிக்கூடத்திலே ஆசிரியர்களிடத்தில் எப்படிப் பணிவோடு மரியாதையோடு பழகவேண்டும். உடலையும் உடைகளையும் எவ்விதம் சுத்தமாக வைத் துக் கொள்ள வேண்டும்; பள்ளிக்கு வரும்போது வீதி களிலே வம்பு பேசாமல் எவ்வாறு ஓரங்களிலே கடந்து வரவேண்டும்; என்பனவற்றையெல்லாம் நாடகங்களின் மூலம் போதிக்கலாம். மகாகவி பாரதியார் ஓடி விளையாடு பாப்பா' என்னும் பாட்டிலே குழந்தைகளுக்கு எவ்வளவு அருமை யாக கல்ல பொருள்களை எடுத்துச் சொல்லுகிருர்?... அதையேதான் நாடகத்திலும் சொல்லவேண்டும். உயிர்களிடத்தில் அன்பு: உறுதியான கெஞ்சு, தெய்வபக்தி; உன்னதமான உயர்ந்த எண்ணங்கள்: இவற்றையெல்லாம் நாடகத்தின் மூலம் போதிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/150&oldid=1322696" இலிருந்து மீள்விக்கப்பட்டது