பக்கம்:நாடகக் கலை 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் #51 தாய் மொழிப்பற்று; தேசபக்தி; தீமைகளை எதிர்த் துப் போராடும் உணர்ச்சி; இவைகளெல்லாம் கம் குழந் தைகளுக்கு இளம்பருவத்திலேயே உண்டாகவேண்டும். நல்ல நாடகங்களின் வாயிலாக இவற்றைச் சுலபமாகப் பெறலாம். காவியம் தந்த ஓவியம் ஒரு சிறு கதை சொல்லுகிறேன், கேளுங்கள். நல்ல கதை: ஒர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இருபதுவயது.அந்த இளைஞனுடைய தாயும் தந்தையும் வயதானவர்கள்; இருவருக்கும் கண் தெரியாது. நடக்க முடியாத நிலையில் இருந்தார்கள். இளைஞன் மிகவும் கலலவன்; பெற்றவர்களைத் தெய்வ :மாக எண்ணிப் பேணிவந்தான். தாய் தந்தையர் இருவரையும் இரண்டு கூடைகளில் உட்கார வைத்துத் துணியால் கட்டிக் காவடிபோல் தான் போகுமிடங்களுக்கெல்லாம் தோளிலே சுமந்து கொண்டு போய்ப் பாதுகாத்து வந்தான். பெற்று வளர்த்த தாய் தந்தைக்குப் பணிவிடை செய்வதையே தனது இலட்சியமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு பெரிய காட்டின் வழியே அவன் அவர்களிருந்த காவடியைத் துக்கிக் கொண்டு போகும் போது தந்தைக்குத் தாகம் ஏற்பட்டது. "மகனே, கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா என்ருர் தந்தை. உடனே மகன் அவர்களைக் கீழே இறக்கிவைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/151&oldid=1322697" இலிருந்து மீள்விக்கப்பட்டது