பக்கம்:நாடகக் கலை 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நாடகக் கலை எந்த மதமாயிருந்தாலும் இந்த உண்மையைத்தான் போதிக்கிறது. எனவே, சமய உண்மைகள் நாடகங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துச்சொல்லப்பட வேண்டுமென்பதை அழுத்தமாகச் சொல்லுவேன். நாடகசாலை நல்ல கலாசாலை "கண்ணச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்(கு) எண்ணரிய போதனைகள் ஈவதற்கு-நண்னுமிந்த நாடகசாலை யொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து.' இவ்வாறு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கூறுகின்ருர். காடகசாலையை யொத்த நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ? சொல்' என்று கம்பீரத்துடன் கேட்கிருர் கவிமணி. ஆம்; காடகசாலையை கல்ல கலா சாலையாக அந்தக் கவிதை உள்ளம் காணுகிறது. இந்தப் பாடல் எங்கள் அவ்வையார் நாடகத்தைக் கவிமணி அவர்கள் பாராட்டியபோது பாடிய பாடல். இந்தக் கருத்தின்படி நாடக கற்கலாசாலைகள் நாடெங்கும் தோன்ற வேண்டும். அதன் மூலம் மக்க ளின் கண்ணைச் செவியைக் கருத்தை எல்லாம் கவர்ந்து, அவர்களுக்கு எண்ணரிய போதனைகள் ஈந்து, அவர்கள் வாழ்வை வளமுடையதாக்க வேண்டும்; தூய்மைப் படுத்த வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/158&oldid=1322704" இலிருந்து மீள்விக்கப்பட்டது