பக்கம்:நாடகக் கலை 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 17 பலா, மாதுளை முதலிய பலவகையான பழங்கள கடை களில் இருக்கும். அகதப் பழங்களை யாரும் அதிசயத் தோடு பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனல் பழங் களைப்போல மண்ணுலோ, காகிதத்தாலோ செய்து வர்ணம் பூசிக் கடைகளில் வைத்திருக்கிருர்களே, அவற்றைப் பார்த்து அதிசயப்படுகிருேம். "அடடா! மண்ணுல் செய்தது மாம்பழம்போல் இருக்கிறதே' என்று பார்த்துப்பார்த்துப் பரவசம் அடைகிருேம் அல்லவா? இப்படி கேரில் கண்ட ஒர் அழகிய காட்சியைச சித்திரத்திலே காணும்போதும், தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் கம் வீட்டிலுள்ள பாப்பாவைப் புகைப் படத்திலே பார்க்கும்போதும், உண்மையான பழங் களைப் பார்ப்பதைவிடப் பழங்கள் போலச் செய்தன. வற்றைப் பார்க்கும்போதும் கமக்கு ஒரு தனி இன்பம், மகிழ்சசி ஏன் ஏறபடுகின்றது? இந்த உணர்ச்சிக்குக் காரணம் என்ன? அதே காரணத்தால்தான் நாடகமும் தோன்றியிருக்க வேண்டும். இதுவே அறிஞர்களின் கருத்து. மூவகை உணர்ச்சிகள் மனிதனுக்கு மூன்று உணர்ச்சிகள் உண்டாகின் றன. ஒன்று பசி உணர்ச்சி; இரண்டாவது ஆண்பெண் பால் - உணர்ச்சி; மூன்ருவது விளையாட்டு உணர்ச்சி. இந்த உணர்ச்சிகள இயல்பாகவே உண்டா கின்றன. விளையாட்டு உணர்ச்சிகளில் பிறர் செய் வதைப்போல் நாமும் செய்துகாட்ட வேண்டுமென்ற உணர்ச்சி, குழந்தைப் பருவம் முதலே கம்மிடம் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/18&oldid=1322548" இலிருந்து மீள்விக்கப்பட்டது