பக்கம்:நாடகக் கலை 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 19 களைக் காட்டி விளையாடினர்கள். அந்த விளையாட்டுக்கு 'கிழற்பாவைக் கூத்து' என்பது பெயர். இந்த நிழற் பாவைக்கூத்து இப்போது கம் நாட்டில் அதிகமாக இல்லை. மலேயா, தாய்லந்து பகுதிகளில் சாதாரண மாக நடைபெறுகின்றது. காங்கள் மலேயா சென் றிருந்தபோது இந்த நிழற்பாவைக் கூத்துக்களைப் பார்த்தோம். இராமாயணம், மகாபாரதம் ஆகிய கதைகளை இவர்கள் காட்டுகிருர்கள். இப்படிக் காட்டுபவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். கலத்துறை மத வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டது என்பதை இது காட்டுகிற தலலவா? நாடக விளையாட்டு இவ்வாறு உயிரில்லாத பொம்மைகளை வைத்துக, கொண்டு விளையாடுவதைவிட உயிருள்ன மனிதர் களையே வேடம் புனையச் செய்து ஆடிப்பாடி கடிக்க வைத்துப் பார்ப்பது மிகச் சிறந்த விளையாட்டல்லவா? இது யாரோ ஒரு பெரியவர் மூளையில் முதலில் தோன்றி யிருக்கிறது. அதன் பயனுகத்தான் இகத நாடக விளை யாட்டு உண்டாகி இருககிறது. இன்னும் நாடகத்தை 'விளையாட்டு என்று தமிழிலே சொல்லுவதுண்டு. ஆங்கிலத்தில்கூட டிராமா' என்பதோடு பிளே (Play) என்றும் சொல்வதுண்டலலவா? இப்படி கம்முடைய முன்னேர்கள் மூளையிலே ஒரு காலத்தில் தோன்றிய இந்த நாடக விளையாட்டு, பாவைக் கூத்து முதல் பலவிதக் கூத்துகளாக முன் னேறி வளர்ந்து நாட்டியமாகி, காட்டிய நாடகமாகி, இன்று காம் காணும் நவீன நாடக உலகிற்கு வந்த கதை மிகப் பெரிய வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/20&oldid=1322550" இலிருந்து மீள்விக்கப்பட்டது