பக்கம்:நாடகக் கலை 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாடகக் க8ல ஆக, மறைந்தும் அழிந்தும் போன பழைய நூல் கள் போக, இப்போது கமது காலத்தில் இருந்துவரும் நாடக இலக்கண நூல்கள் காடகவியல், மதங்க சூளாமணி, சாகுந்தல ஆராய்ச்சி, நாடகத் தமிழ் ஆகிய நான்கு நூல் களாகும். இப்போது நான் பழைய நூல்கள் எனக் குறிப்பிட் டவை யெல்லாம் நாடக இலககண நூல்களே தவிர ஒன்றுகூட இலக்கியம் அன்று. காட்சி நூல்கள் கான் முன்பு குறிப்பிட்டவாறு நாடக இலக்கியங் கள் படித்து மாத்திரம் மகிழும் இலக்கியங்கள் அல்ல; மேடையில் பார்த்து மகிழும் இலக்கியங்கள். படித்து மகிழும் இலக்கியத்தைக் கேள்வி நூலென்றும், பார்த்து மகிழும் இலக்கியத்தைக் காட்சி நூலென்றும் குறிப்பிட லாம். பார்த்து மகிழும் நாடகங்கள் இலக்கிய வடிவிலே -நூல் வடிவிலே இருந்தாலும்கூட, அவற்றைக் காட்சி நூல்கள்’ என்றே அறிஞர்கள் சொல்லுவார்கள். பழைய நூல்களுள் காட்சி நூல் என்று சொல் வதற்கு நூல் வடிவில் நாடகம் எதுவும் கமக்குக் கிடைக்காவிட்டாலும், தமிழ் காட்டில் ஆயிரக் கனக் கான ஆண்டுகளாக நாடகங்கள் தொடர்ந்து நடை பெற்று வந்திருக்கின்றன என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. நாடகங்களுக்கு மானியம் இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் முதலிய மன்னர்கள் அந்த காளில் காடகம் நடிப்போர்க்கு மாணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/27&oldid=1322557" இலிருந்து மீள்விக்கப்பட்டது