பக்கம்:நாடகக் கலை 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 33. கொண்டு வருகதுவாள். குறத்தி வந்து குறி பார்த்து *நீ அவரையே மனப்பாய்’ என்று ஆறுதல் கூறுவாள். பிறகு அந்தப் பெண்மணி, தான் காதல் கொண்டவரை அவ்வாறே மணம் புரிவாள். அப்புறம், காணுமற் போன குறத்தியைத் தேடி அவள் கணவனை குறவன் வருவான். இருவரும் ஆடிப்பாடிச் செல்வார்கள். அநேகமாக எல்லாக் குறவஞ்சி நாடகங்களிலும் இதுவேதான் கதை. குற்ருலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி இவ்வாறு எழுதப் பெற்றவை. குறவஞ்சி நாடகங் களுள் சிறப்பு வாய்ந்த பாடல்களைக் கொண்ட இலக் கியமாகக் கருதப்படுவது திருக்குற்ருலக் குறவஞ்சி யாகும். இதனை ஆடலும் பாடலும் கொண்ட நாட்டிய காடகமாகவே நமது கடனமணிகள் ஆடிவருகிறர்கள். இந்தப் பெருமைக்குரிய குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர். - இன்னும், நாடக அலங்காரம், வாசகப்பா, சபா, பள்ளு முதலான பெயர்களிலும் காடகங்கள் இருந்தனவென்று தெரிகிறது. மனேன்மணியம் 1891-ல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனேன் மணியம் என்னும் அற்புதமான நாடகத்தை அகவற் பாவால் எழுதியிருக்கிருர். இது தமிழ்ப் புலவர் களாலும் அறிஞர்களாலும் போற்றப்பெற்ற ஒரு சிறந்த தமிழ் நாடகம், இந் நாடகத்தை இதுவரை நானறிந்த வரையில் யாரும் நடித்ததில்லை. இது கடிப்பதற்காக எழுதப்பட்டதன்று, என ஆசிரியரே குறிப்பிட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/35&oldid=1322566" இலிருந்து மீள்விக்கப்பட்டது