பக்கம்:நாடகக் கலை 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 45 கங்களையே இவர்கள் முதன்மையாக கடித்து வந்தார்க ளென்பதும் குறிப்பிடத் தக்கது. பயில் முறை சபைகள் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சுகுண விலாச சபையைப் பின்பற்றித் தமிழ் காட்டில் பயில் முறை நாடக சபைகள் பல தோன்றின. கும்பகோணம் விலாச சபை, எப். ஜி. நடேச ஐயர் தொடங்கிய திருச்சி ரசிக ரஞ்சனி சபை, தஞ்சை சுதர்சன சபை, குமா கான சபை, சென்னை செக்ரட்டேரியட் பார்ட்டி முதலிய சபைகளில் சிறந்த அமெச்சூர் நடிகர்கள் பலர் பயிற்சி பெற்று வளர்ந்தார்கள். பம்மல் சம்பந்தனரின் அரிய பணி பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தொண்ணுாற் துக்கு மேற்பட்ட நாடகங்கள் எழுதியிருக்கிருர். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் பலவற்றை மொழி பெயர்த்திருக்கிருர். வடமொழியிலுள்ள காளிதாசரின் மாளவிகாக்னிமித்திரம் ஹர்ஷவர்த்தனரின் இரத்தினவளி முதலிய நாடகங்களையும் மொழி பெயர்த்திருக்கிருர். பம்மல் சம்பந்தனரின் நாடகங்களிலே கற்பனை நாடகங் களான மனேகரன், இரண்டு கண்பர்கள் போன்ற ஒரு சில காடகங்கள், உலக காடகக் கதைகளோடு ஒப்பிடத் தக்கவை என்பதைப் பெருமையோடு குறிப்பிடலாம். இவரது மனுேகரன் நாடகத்திற்குச் சங்கரதாஸ் சுவாமி களும், உடுமலை முத்துசாமிக் கவிராயரும் பாடல்கள் எழுதியிருக்கிருர்கள். இந்த நாடகம் சென்ற எழுபது ஆண்டுகளாகத் தமிழ் நாடக மேடையில் அமரத்வம் பெற்ற நாடகமாக விளங்கி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/47&oldid=1322578" இலிருந்து மீள்விக்கப்பட்டது