பக்கம்:நாடகக் கலை 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாடகக் க9ல காடக சபைகளிலும் இதே வழக்கம்தான் இருந்து வந்தது. இதில் முதல் முதலாக மாறுதல் செய்து பெண்களையும் சேர்த்து நடிக்கச் செய்தது எங்கள் காடக சபைதான் என்பதைப் பெருமையோடு குறிப்பிட வேண்டும். அவ்வாறு முதன் முதலாக எட்டு வயதுப் பருவத்திலேயே எங்கள் குழுவில் நடிகையாகச் சேர்க்கப் பட்டவர் எம். எஸ். திரெளபதி. சதாவதானம் பாவலர் 1922-ல் சென்ஆனயில் சதாவதானம் திரு தெ. பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் பால மனேகர சபா என்ற பெயரால் ஒரு நாடக சபையை கடத்தினர். காங்களும் இந்த நாடக சபையில் சில காலம் பணியாற்றினுேம். ராஜா பர்த்ருஹரி என்ற சரித்திரக் கற்பனை நாடகத்தை யும் கதரின் வெற்றி என்னும் சமூக நாடகத்தையும் இவரே எழுதித் தயாரித்து கடத்தினர். இவர் ஒரு தேசியவாதி. கதரின் வெற்றிதான் தமிழ் நாட்டில் முதல் முதலாக கடத்தப் பெற்ற தேசிய சமுதாய நாடகம். இந் நாடகம் 1922-ல் பல எதிர்ப்புகளுக்கு இடையே கடத்தப் பெற்றது. காகபுரிக் கொடிப் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தேசியக் கொடி என்னும் ஒரு நாடகத்தையும் இவர் எழுதி கடத்தினர். லண்டனில் தமிழ் நாடகங்கள் பாவலர் அவர்களும் சுகுண விலாச சபையில் கடிகராக இருந்து, பம்மல் சம்பந்த முதலியார் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/50&oldid=1322581" இலிருந்து மீள்விக்கப்பட்டது