பக்கம்:நாடகக் கலை 1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாக்கும் எழுத்தாற்றலும் அவரிடம் இருப்பதனை இந்நூலில் கண்டு என் இதயம் பூரிப்படைகின்றது. அவர் என்னுடைய நண்பரல்லவா! 'நாடகத்தில் பிரசாரம்' என்ற பகுதியில் கலை கலைக் காகவே' என்ற கோஷத்திலுள்ள குறைபாட்டினைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டி. கலை மக்களை வாழ்விக்க வும் பயன்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, நாடகத் திலே பிரசாரமும் கலந்தால்தான் அது சாத்தியமாகுமென்று கூறுகின்ருர். நாடகக் கலையை, நடிப்பு, நாடக எழுத்து, பயிற்று விக்கும் ஆசிரியத் தன்மை, நடத்திவைக்கும் அமைப்பு (கம்பெனி) ஆகிய பல்வேறு கோணங்களில் நின்று விமர்சிக் கிருர் ஆசிரியர். அதனால், அளவால் சுருங்கியதாயினும், நாடகக் கலையை விமர்சிப்பதிலே முழுமை பெற்றதாக விளங்குகின்றது இந் நூல். நாடகக் கலையின் சிறப்பை, அதனல் விளைந்து வரும் நற்பயன்களை எடுத்துரைக்கும் ஆசிரியர், ஆங்காங்கே தம்முடைய-தம் சகோதரர்களுடைய தம் நடிகக் குழுவின ருடைய-அனுபவங்களையும் வழங்கியுள்ளார். முன் தலைமுறையில் வாழ்ந்து மறைந்த, தன் தலைமுறை யில் தம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிக நடிகையர் களின் பெயர்களையும்-அவர்கள் வாழ்க்கையில் சுவையுள்ள நிகழ்ச்சிகளையும் இந்நூலில் சேர்த்து, வருங்காலத் தலைமுறை நடிக-நடிகையர் அவர்களை ம்றந்துவிடாதிருக்க வழி செய்திருக்கிருர் ஆசிரியர் சண்முகம். இது, வளர்ந்து விட்டவர்களிடம் எளிதில் காண முடியாத உயர்ந்த பண் பாடு பொதுவாக, இந்நூல் நாடகக் கலையின் சரித்திர சாஸ் னம் எனலாம். பல்கலைக்கழகமொன்றில் நிகழ்த்திய சொற் பொழிவாக அமைந்திருக்கும் இந்நூலை, கல்லூரிகளில் பாட மாக்கினல், மாணவர்கள் பயன் பெறுவர். இது இலக்கியங் களோடு சேர்த்து எண்ணத்தக்க சிறந்த நூல் என்பதில் ஐய மில்லை. இவ்வளவு சிறந்த ஒரு நூலில் என் பெயரும் இடம் பெறும் அளவில் நான் ஒரு நடிகனக இல்லாமற்போனதற்கு ஏங்குகின்றேன். இந் நூலாசிரியர் இன்னும் பல நூல்களை எழுதி மேலும் மேலும் புகழ் பெறுவாராக! 25–8–67 ● சென்னை-5 ம. பொ. சிவஞானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/7&oldid=1322536" இலிருந்து மீள்விக்கப்பட்டது