பக்கம்:நாடகக் கலை 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் கலை 73 செய்யுள்கள் இருக்கின்றன. உவகை, பெருமிதம், நகை வெகுளி, வியப்பு, அவலம், அச்சம், வெறுப்பு, சமநிலை ஆகிய கவரச பாவங்களையும் எப்படி எப்படி வெளிப் படுத்த வேண்டுமென்பதற்குரிய குறிப்புகள் அதில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அது நாம் பயிலும் கடிப்புக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யும். ஆனால், மேடையில் இன்றைய நாடகத்தில் அப்படியே பயன் படுத்த இயலாது. காரணம்; அந்த அவிநய முறைகள் எல்லாம் காட்டிய நாடகத்திற்காக எழுதப்பெற்றவை. கதகளி என்று சொல்லுகிருேமே, அதைப்போன்ற ஆடலும் பாடலும் கொண்ட நாடகத்திற்கே உரியவை. இன்றைய நாடகத்தில் இயற்கை நடிப்பு வேண்டும். கைம் முத்திரைகளும், முக பாவங்களும் உடனுக் குடன் மாறிக்கொண்டிருக்கும் அந்த அவிநய முறை நடனத்திற்கே ஏற்றது. இன்று நாம் கடிக்கும் வளர்ச்சி யடைந்துள்ள நாடகங்களில் அத்தகைய நடிப்பை கடித் தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். இயற்கை நடிப்பு வேண்டும். நடிப்புக்குப் பயன் தரும் நூல்கள் காலஞ்சென்ற திருவாளர் வி. கோ. பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய காரயண சாஸ்திரியார் தம்மு டைய நாடக இயல் எனனும் நூலில் அருமையான பல குறிப்புகளைத் தருகிறர். செய்யுள் கடையில் அமைந்த நூல் இது. இதுவும் நடிப்புக் கலை பயில்வோருக்குப் பயன்படும் ஓர் அருமையான நூல். மதங்க சூளாமணி என்று ஒரு நூல் இருக்கிறது; மதுரைத் தா.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/74&oldid=1322607" இலிருந்து மீள்விக்கப்பட்டது