பக்கம்:நாடகக் கலை 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாடகக் கஜல கொள்கிறர்கள். ஒவ்வொரு கடிகனும் பேசும் கண்கள் பெற்றிருக்க வேண்டும். கண்ளுெடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயறு மில’ என வள்ளுவர் பெருமான் கூறுகிருர். எனவே, கண்கள் கடிகனின் முதல் கருத்தாக. இருக்க வேண்டும். மேடையில் கின்று கடிக்கும்போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது வேறு எங்காவது சுழலவிட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டுவிடும். அந்த நடிகன் ஏன் இவன் சொல்வதைக் கவனிக்க வில்லை? சபையில் யாரையோ பார்க்கிருனே!...ஓ! அந்த அழகியைப் பார்க்கிருன் போலிருக்கிறது. இல்லை இல்லை, அமைச்சர் எப்படி ரசிக்கிருரென்று பார்க்கிருன்’ இப்படியெல்லாம். சபையோர் எண்ணத் தொடங் கில்ை நாடகத்தின் கிலையென்ன? அந்தப் பாத்திரத்தின் கதியென்ன? உயிரற்ற கண்கள் சில நடிகர்களுச் குப் பேச்சுத் தெளிவு பிரமாதமாக இருக்கும்; தோற்றமெல்லாம் அபாரமாக இருக்கும்; பேச்சிலே உணர்ச்சியும் இருக்கும்; ஆனால், கண்களில் மாத்திரம் எந்தவிதமான பாவமும் இராது. கோபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/77&oldid=1322610" இலிருந்து மீள்விக்கப்பட்டது