பக்கம்:நாடகக் கலை 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 27, 28, 29 தேதிகளில், மாணவர்களுக்காக, நான் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அவற்றைப் பல்கலைக் கழகத்தாரே அந்த ஆண்டில் நூல் வடிவிலும் வெளியிட்டனர்; இசைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகவும் வைத்தனர். இந்த அரிய வாய்ப்பினை நல்கிய அண்ணுமலைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இந்நூலின் இரண்டாவது பதிப்பு தமிழ் நாடகப் பேராசான், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் வாயிலாக 1967-ல் வெளியிடப் பெற்றது. என்னுடைய வணக்கத்திற்குரிய ஆசிரியர் பெருமானின் நாற்ருண்டு விழாவினையொட்டி அப்பதிப்பு வெளிவந்தது சிறப்புக்குரியதாகும். முதற்பதிப்பிற்குத் தமிழ்ப்பெரியார் தெ பொ. மீனட்சி சுந்தரஞர் அவர்கள் முன்னுரை எழுதியும், இரண்டாம் பதிப்பிற்குச் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் அவர் கள் அணிந்துரை வழங்கியும் சிறப்பித்துள்ளார்கள். இப் பெரியார்களுக்கு என் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக. இந்நூலினை இந்த ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகக் கலைப்பட்டப் படிப்பிற்குரிய (பி. ஏ. தேர்வு) தமிழ்ப் பாட நூலாகத் தேர்ந்துள்ளார்கள். இதல்ை இப் புதிய பதிப்பு இன்று தோற்றமளிக்கிறது. இதற்குக் காரணமாக அமைந்த சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கும் பெரிதும் நன்றிக் கடப்பாடுடையேன். இப்பொழுது வெளிவரும் இம் மூன்ரும் பதிப்பு அவ்வை பதிப்பகத்தாரின் முதல் வெளியீடாக மலர்கிறது. அடுத்தடுத்து இன்னும் பல நூல்கள் வெளிவர அவ்வை திருவருள் பாலிப்பாளாக. 'அவ்வையகம்’ சென்னை-86 o 莎 o &字 ண் & ம். 27–5-72 s தி (op

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/9&oldid=1322538" இலிருந்து மீள்விக்கப்பட்டது