பக்கம்:நாடகக் கலை 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

என்று ஒரு அறிஞர் கூறுகிறார். இது நூற்றுக்கு நூறு உண்மை. மனோகரன் நாடகத்தில் ஆவேசம்கொண்ட மனோகரன் தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளை அறுத்துக்கொண்டு தந்தையை வெட்ட முயல்கிறான்; எல்லோரும் தடுக்கிறார்கள்; பயனில்லை; அமைச்சர் சத்தியசீலர், தாய் பத்மாவதி தேவிக்கு மனோகரன் அளித்த வாக்கை நினைவுபடுத்துகிறார். கதையில் முன்பு நடைபெற்ற இரண்டு காட்சிகளில் இதே போன்று வசந்த சேனையை வெட்ட முயன்றபோது சத்தியசீலர் மனோகரன் அளித்த வாக்குறுதியை நினைவு படுத்தித்தான் தடுத்தார். அப்போது மனோகரன் அந்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டுப் பேசாது போய்விட்டான். இப்போது மனோகரன், அந்த வாக்கை நினைவுபடுத்திய பிறகும் கட்டுப்பட வில்லை. சத்தியசீலரையும் உதறித் தள்ளிவிட்டு தந்தையையும் அவரது காதற்கிழத்தி வசந்த சேனையையும் வெட்டப் பாய்கிறான்.

அந்த நேரத்தில் ஒரு கை மனோகரனின் கையைப் பிடித்து நிறுத்துகிறது. வேகமாய்ப் பாய்ந்த மனோகரன் திகைப்புடன் நின்று பார்க்கிறான். முக்காடிட்ட ஒரு பெண் எதிரே நிற்கிறாள். அவள் முக்காடு நழுவி விழுகிறது. யார் அந்தப் பெண்?

தன்னைப் பெற்ற தாய்! "பத்மாவதி தேவி, பத்மாவதிதேவி" என்று சபையிலுள்ள அமைச்சர்களும் மற்றவர்களும் வியப்பே வடிவாக நிற்கிறார்கள்.

ஆம்; தன் தாய்தான்; பத்மாவதி தேவிதான்; 'மனோகரா, நில்; விடு வாளை!' என்றாள் பத்மாவதி.

இந்தக் காட்சியில் மனோகரன் ஆவேசங்கொண்டு பாய்வதும், கையைப்பிடித்து நிறுத்துவதும், 'அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/103&oldid=1554059" இலிருந்து மீள்விக்கப்பட்டது