பக்கம்:நாடகக் கலை 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

காசங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லா வற்றையும் நடிகன் படிக்கவேண்டும். அப்போதுதான் பல்வேறு பாத்திரங்களின் பண்புகள் பழக்க வழக் கங்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

கம்ப ராமாயணத்தில் நடிப்புக் குறிப்புள்ள செய். யுட்கள் பல இருக்கின்றன. ஒன்று சொல்லுகிறேன். இந்திரஜித்து மாயாசீதையை அனுமார் முதலிய வானரங்களின் முன்கொணர்ந்து வெட்டிவிடுகிருன். இந்தத் துக்ககரமான செய்தியை அனுமான் இராம. பிரானிடம சொல்லுகிருர், உடனே இராமனின் நிலை எவ்வாறிருந்தது என்பதைக் கம்பர் எவ்வளவு அற்புத மாகச் சொல்லுகிருர் பாருங்கள்.

'துடித்திலன்; உயிர்ப்பு மில்லன் இமைக்கிலன்;

துள்ளிக் கண்ணிர் பொடித்திலன்; யாது மொன்றும் புகன் றிலன்;

பொருமியுள்ளம் வெடித்திலன், விம்மிப்பாரின் வீழ்ந்திலன்;

வியர்த்தானல்லன், அடுத்துள துன்பம்யாவும் அறிந்திலர் அமரரேயும்’ சாதாரணமாகத் துன்பத்தைக் காட்டும் எந்த மெய்ப் பாட்டுணர்ச்சியும் இராமனுக்கு ஏற்படவில்லை. சீதை வெட்டப்பட்டாளென்ற செய்தியைக் கே ட் ட து ம் இராமன் துடித்திலன் - உடம்பை அசைக்கவில்லை; உயிர்ப்பு மில்லன் - உயிர் இருப்பதாகவும் தெரியவில்லை: துள்ளிக் கண்ணிர் பொடித்திலன் - கண்ணிர் விடவு மில்லை; யாது மொன்றும் புகன்றிலன் - எதுவும் பேசவில்லை; பொருமி உள்ளம் வெடித்திலன் - துயரத் தால் மனம் பொருமி வெடித்து விடவுமில்லை; விம்மிப் பாரின் வீழ்ந்திலன் - அழுது புலம்பி அடியற்ற மரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/106&oldid=1322472" இலிருந்து மீள்விக்கப்பட்டது