பக்கம்:நாடகக் கலை 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தில் பிரசாரம்

கலே கலைக்காகவா ?

கலை கலைக்காகவே என்று சொல்லுபவர்கள் நம்மிடையே சிலர் இருக்கிருர்கள். கலை வாழ்க்கைக் காகவே என்று சொல்லுபவர்கள்-எண்ணுபவர்கள் பலர் இருக்கிருர்க்ள். கலையை ரசிப்பவர்களிடையே மட்டுமல்ல இந்த வேற்றுமை : கலையைக் கையாள் பவரிடையேயும் கூட இவ்வாறு இரண்டு வேறுபட்ட கொள்கைகள் இருந்து வருகின்றன.

கலை கலைக்காகவே என்று கருதுபவர்கள் நாட கத்தை வெறும் பொழுது போக்காகக் கருதி ரசிப்ப தோடு மன நிறைவு பெற்றுவிடுகிருர்கள். கலை வாழ்க்கைக்காகவே என எண்ணுபவர்கள் அவ்வாறு ரசிப்பதில்லை. அவர்களுக்குக் கலை வாழ்க்கைக்குப் பயன் தரும் ஒன்ருக அமைய வேண்டும். பயனில்லாத கலையை அவர்கள் போற்றுவதில்லை.

பொழுது போக்காக மட்டுமே கலை இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் மக்களிடம்-மனித சமுதாயத்தினிடம் கருணை இல்லாதவர்கள், அன்பில் லாதவர்கள். மனிதன் உயர வேண்டும், வாழ்க்கை உயர வேண்டும் ; சமுதாயம் உயர வேண்டும் என் றெல்லாம் அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. ல்ை கலை உயர வேண்டுமென்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நா.- 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/111&oldid=1322479" இலிருந்து மீள்விக்கப்பட்டது