பக்கம்:நாடகக் கலை 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

படுத்தாமல் வேறு ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த சக்தியை வழிபடுவதோடு, பூசிப்ப தோடு மட்டும் நின்று விடுவதா? அது போல்தான் இருக்கிறது கலை கலைக்காகவே' என்பது.

மக்களுக்கு விரைவாக அறிவு வளர்ச்சியைக் கொடுப்பதும், புரட்சிகரமான மன மாற்றத்தை உண்டு பண்ணச் செய்வதும், உன்னதமான இலட்சியங் களைத் தேசத்தில் பரப்புவதுமான சர்வ சக்தி படைத்த கலையே நாடகம். இதை வெறும் பொழுது போக்கும் அழகுக் கலையாக மட்டும் போற்றுவது நாட்டிற்கு நஷ்டமல்லவா?

உணவு உடலுக்கா? நாவுக்கா?

வயிற்றுப் பசிக்கு உணவு தேவை; ஆனால், வயிற் றுப் பசிக்காக மட்டுமா உணவு அருந்துகிருேம்? சிந்தித்துப் பாருங்கள். பசிக்காகவே உணவு என் றிருந்தால் அறுசுவை உண்டி எதற்கு ? இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு இந்த சுவைகளெல்லாம் எதற்கு? பசி நேரத்தில் எதை யாவது அள்ளிப் போட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியதுதானே? அப்படியா செய்கிருேம்? இல் லையே! உப்பு அதிகமாய்ப் போய்விட்டால் அந்தச் சுவை உணர்ச்சி நமது முகத்தில் உடனே தெரி கிறதே!

அப்படியால்ை பசிக்காக உணவு என்ருலும் அந்த உணவு நாவிற்கும் ருசியாக இருக்க வேண்டும் என்ருகிறது. சரி; நாவிற்கு ருசியாக இருப்பதை யெல்லாம் சாப்பிடலாமா? அப்படிச் சாப்பிட்டால் உடம்பிற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே உண்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/120&oldid=1322491" இலிருந்து மீள்விக்கப்பட்டது