பக்கம்:நாடகக் கலை 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

கலந்து, அன்பைக் கலந்து, அருளைக் கலந்து நாட்டு மக்களுக்கு ஊட்டிவிடுகிருன்.

வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’ என்னும் உறுதி யான கொள்கையுடையவன் அவன்.

நாடகமும் பிரசாரமும்

சாதாரணமாகப் பிரசாரம்' என்று சொல்லும் பொழுது சமூக, அரசியல், பொருளாதார விஷயங் களை மட்டும்தான் நாம் பிரசாரமாக நினைக்கிருேம். அது தவறு. மனிதனுடைய மைேதத்துவப் போராட் டங்களை விளக்கிக் காட்டி அதில் நல்லதற்கு வெற்றி காண்பிப்பதும் பிரசாரம்தான்.

பிரசாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நிரந்தரமானது. மற்ருென்று அழியக்கூடியது. உள்ளத்திலே எழக்கூடிய உணர்ச்சிப் போராட் டங்கள் நிரந்தரமானவை; மனித குலம் இருக்கும் வரை அந்த உணர்ச்சிகளும் இருக்கும். சமூக அரசி யல் பொருளாதாரப் போராட்டங்கள் நிலையற்றவை. கால மாறுபாட்டிற்கேற்ப நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போகும். இந்த இரண்டு வகையான பிரசார நாடகங்களும் நாட்டுக்குத் தேவையானதாம். தனி மனிதனுடைய உள்ளத்தையும் உயர்த்த வேண்டும், சமுதாயத்தின் நிலையையும் உயர்த்த வேண்டும்; தனி மனிதப் பண்பு வளர்வதிலேதான் சமுதாயத்தின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்

தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/122&oldid=1322493" இலிருந்து மீள்விக்கப்பட்டது