பக்கம்:நாடகக் கலை 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

வேண்டும். அதுதான் கலைக்கும் அப்பட்டமான பிரசாரத்திற்கும் உள்ள வேறுபாடு.

பிரசாரக் கருத்துக்களை வெளியிடும் ஆவேசத்தில் நாடகக் கலைக்குரிய சிறப்பான அம்சத்தைக் கொன்று விடக்கூடாது. உரையாடல்களை எழுதும் பொழுது நாடகப் பாத்திரங்களை நன்கு நினைவில் இருத்த வேண்டும். கருத்துக்காக வசனமே தவிர வசனத்திற் காகக் கருத்தல்ல. அடுக்கு மொழிகள் அவசியமான கட்டங்களிலே இருக்கலாம். அது நாடகத்திற்குச் சிறப்பைத் தரும். ஆல்ை, நாடக வசனம் முழுவதும் முதலிலிருந்து இறுதிவரை எந்தப் பாத்திரம் பேசி லுைம் அடுக்கு மொழியாகவே இருக்கவேண்டுமா? அதல்ை நாடக உணர்ச்சி குறைந்து விடாதா? பாத் திரத்தின் பண்பு கெட்டு விடாதா? இவற்றையெல் லாம் நாடகாசிரியன் நன்கு சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமன்று, நாடகத்தைப் பார்க்கிறவர்கள் பாத்திரங்களையும், அவர்களுடைய உ ண ர் ச் சி ப் போராட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் மறந்து விட்டு வெறும் வார்த்தைகளுடைய ஜாலங்களிலேயே மனத் தைச் செலுத்தும்படியாக ஆகிவிடுகிறது.

கலையம்சமுள்ள பிரசார நாடக மென்ருல், பாத் திரப் படைப்பு ; குணப் போராட்டம்; இப்போராட் டத்தில் உச்சம் ; அந்த உச்சத்தின் விளைவு ; காலம், இடம், செயல் இவற்றின் ஒருமைப்பாடெல்லாம் சிறப் பாக அமைந்த ஒரு கட்டுக்கோப்பு இருக்கவேண்டும்.

கல்வழி என்பது அறவழி

கலைக்குரிய மகத்தான ஒரு சிறப்பையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும். கலைவழி என்பது அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/124&oldid=1322495" இலிருந்து மீள்விக்கப்பட்டது