பக்கம்:நாடகக் கலை 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

  • பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்

அதனிலும் திறன் பெரிதுடைத்தாம் அருங்கல வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழியென்று நீ யறிந்தாய் ’’

என்று மகாகவி பாரதி சொல்லும்போது நமக்கு எத்தனை பெரிய உண்மை புலனுகிறது; மக்களைச் செயல்படுத்தும் வழிகளை இரண்டாகப் பிரித்து ஒரு வழியைக் கொலை வழியென்றும் மற்ருெரு வழியைக் கலைவழியென்றும் கூறுகிருர். கொலை வழியைவிடக் கலைவழி வலிமையுடையது, திறனுடையது என்று அழுத்தமாகக் கூறுகிருர். எனவே, வலிமை வாய்ந்த இந்தக் கலை வழியிலேயே, அறவழியிலேயே கலைஞர்

கள் செயல்பட வேண்டும்.

பண்டைக்காலத்தில் நடைபெற்று வந்த நாடகங் களை நாம் பார்க்கும்போது இந்தக் கலைவழி எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிகிறது.

நாடக வகைகள்

தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், இதிகாச நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி நாடகம், இலட்சிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாய சீர்திருத்த நாடகம், தேசீய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப் படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரசார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம். -

நா.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/127&oldid=1322498" இலிருந்து மீள்விக்கப்பட்டது